• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/28
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வன்முறையில் மேலும் 17 ‍பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டை உள்நாட்டு பயங்கரவாதச் செயலாகவும், கத்தோலிக்கர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்பு குற்றம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI கூறியுள்ளது.

குறித்த கத்தோலிக்கப் பாடசாலையில் புதன்கிழமை (27) காலை ஒரு தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இருக்கைகளில் அமர்ந்திருந்த 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் முதல் வாரத்தைக் குறிக்கும் திருப்பலியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்தனர் என மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரி பிரையன் ஓ’ஹாரா உறுதிபடுத்தினார்.

அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 23 வயதான ராபின் வெஸ்ட்மேன் என FBI அடையாளம் கண்டுள்ளது.

அவர் ரொபர்ட் வெஸ்ட்மேன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

blank

தெற்கு மினியாபோலிஸின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கத்தோலிக்க பாடசாலையில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

தாக்குதல் நடத்தியவரின் தாயார் மேரி கிரேஸ் வெஸ்ட்மேன், முன்பு இந்தப் பாடசாலையில் பணிபுரிந்ததாக 2016 ஆம் ஆண்டு பாடசாலை செய்திமடல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் தாக்குதல் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related

Tags: FBIMinneapolisஅமெரிக்காமினசோட்டாமினியாபோலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

Next Post

பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேக நபர் கைது!

Related Posts

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
Next Post
நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி காயம்!

பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேக நபர் கைது!

கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழரசுக் கட்சி நான்கு அம்சக் கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

0
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

0

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

0
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16

Recent News

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.