• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/08
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

2018ம் ஆண்டு 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள், என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

நுவரெலியா, கொழும்பு அவிசாவலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாச்சார, வளர்ச்சிகளில் குன்றிய பிரிவினர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இது 200 வருட சாபம், இதற்கு காரணம், இந்த சமூகம் இந்நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வர படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டமை ஆகும்.

இதற்கு காரணம், இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர்கள், இவர்களுக்கு காணி வழங்க கூடாது, வீடு வழங்க கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, தேசிய சுகாதார கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, பிரஜா உரிமை வழங்க கூடாது, என எம்மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இனவாதம்தான்.

200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்த சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976ம் ஆண்டிலேயே தேசிய கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வர பட்டன.

கடைசி தொகுதி குடியுரிமையும் 2003ம் ஆண்டிலேயே வழங்க பட்டு முழுமை அடைந்தது.

ஆகவே தேசிய வளர்ச்சி பாதையில் நாம் தாமதமாகவே நடக்க ஆரம்பித்தோம். இதனால், இந்த சமூகம், பின்தங்கிய சமூகமாக இன்றும் இருக்கிறது.

இந்த இன ஒதுக்கல், கொள்கையை இந்நாட்டில் அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் முன்னெடுத்தன.

இந்த சூழலில்,  இதை கணக்கில் எடுத்தே 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசில், தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் பல்வேறு நல திட்டங்களை முன்னெடுத்தோம்.

அதுவரை மறுக்கப்பட்டு வந்த அல்லது உதாசீனம் செய்யப்பட்டு வந்த, காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை ஆகியவற்றை பெற்றெடுக்கும் பெரும் பணியை நாம் ஆரம்பித்தோம்.

இவற்றை வெறும் ஒரு துறை சார்ந்த அமைச்சினால் மட்டும் செய்ய முடியாது. அமைச்சுகளுக்கு மேலாக, பல்வேறு துறை சார்ந்த அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும்.

இந்த பிரதான தேவை பின் புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் (Affirmative Policy) கொள்கை தேவை அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.

நீங்கள் இன்று இதை, ஒரு அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கிறீர்கள்.

அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்க படுகின்றன. நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லாமல் போகுமானால், அந்த அமைச்சின் அங்கமும் காணாமல் போய் விடும்.

ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு, பராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள், என்பன அமைச்சுகள், அரசாங்கங்கள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல் போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆட்சியை பொறுப்பேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெருகிறது. வாழ்த்துக்கள், மலையக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி உள்ளீர்கள். ஆனால், இந்த ஒரு வருடத்தில் சொல்லிக்காட்ட, எடுத்துக்காட்ட, மலையக பிராந்தியத்துக்கு உங்கள் அரசாங்கம் காத்திரமாக எதுவும் செய்து விட வில்லை. ஆனாலும், நாம் பொறுமையாக காத்திருக்கிறோம்.

நீங்கள் எதுவும் செய்ய வில்லை. என்பதை விட, இன்று, இருப்பதையும் பிடுங்கி எடுக்க முயல்கிறீர்கள். அதையும் நாம் பொறுமையாக ஏற்று கொண்டு இருக்க முடியாது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

நீங்கள் செய்ய முயலும் இந்த காரியத்தின் பாரதூர தன்மையை தெரிந்து கொண்டா, அல்லது தெரியாமலா, நீங்கள் செய்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை.

எதுவாக இருந்தாலும், 2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது ஆட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள் என கோருகிறேன்.

என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: #anurakumaradisanaykeMano Ganeshansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி!

Next Post

சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

மட்டுப்படுத்தப்பட்ட களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை!

மட்டுப்படுத்தப்பட்ட களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை!

வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.