இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு பல சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வரிகளை அதிகரிக்க நடவடைக்கு எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசின் பெரும்பாலான செலவுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் தேவை ஏற்படும்போது அதிகமாகக் கடன் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நவம்பர் 26 அன்று வெளியாகவுள்ள இலையுதிர்கால வரவு செலவு திட்ட (Autumn Budget) அறிவிப்பில், பல முக்கிய வரிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஊகங்கள் வலுக்கின்றன.
இதில் அரசின் தேர்தல் வாக்குறுதிகளை மீறி, வருமான வரியை (Income Tax) அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், அரசாங்கக் கடனுக்கான வட்டி வீதங்கள் சற்று குறைந்திருப்பது போன்ற வேறு சில காரணிகள் ஒரு சிறிய சாதகமான அம்சமாக உள்ளன.
எவ்வாறாயினும், வரவு செலவு திட்ட நிதிநிலைமை மிக மோசமாக இருப்பதால், நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும்போது, பிரித்தானிய மக்கள் மீது குறிப்பிடத்தக்க வரிச்சுமை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


















