கிரேட்டர் மான்செஸ்டரில் மின்சார பைக்குகளின் அபாயகரமான பயன்பாடு மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
முகமூடி அணிந்த நபர் ஒருவர் 10 வயதுடைய குழந்தையுடன் மின்சார பைக்கை வேகமாக செலுத்தி சென்றுள்ள நிலையில் இதனை அவதானித்த அதிகாரிகள், குறித்த வாகனத்தை கண்காணிக்க ஒரு ட்ரோன் மூலம் பின்தொடர்ந்துள்ளார்.
இதன்மூலம் குறித்த வாகனம் சென்று முடிவடைந்த இடத்தில் பெருந்தொகை போதைப்பொருட்கள் இருந்தமையினை கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது குறித்த போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் 21 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, 94 ஹெராயின் மற்றும் கொக்கைன் பொதிகள், கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














