• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் மாவட்ட அரசாங்க  அதிபரின் அறிவுறுத்தல்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter
சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின்  நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (30.11.2025) மு. ப. 11.00 மணிக்கு இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக  – தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக – சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு  பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
1 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும்.
மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
2 சீரற்ற காலநிலையினால்  பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல்   அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன்  அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேற்படி  அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரான உணவு விநியோகத்தில் வினைத்திறனான ஒத்துழைப்பினை வழங்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
3.அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தாம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்களும் பங்குபற்றியதுடன், நேரடியாக இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன்,  திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி,   பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஆ. நளாயினி ஆகியோர் பங்குபற்றினார்கள்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

Next Post

உடைப்பெடுத்தது மாவிலாறு – வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

Related Posts

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!
இலங்கை

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு
இலங்கை

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!
இலங்கை

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

2026-04-15
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !
இலங்கை

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

2026-04-15
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

2026-04-15
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கை

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
Next Post
உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

உடைப்பெடுத்தது மாவிலாறு - வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

0
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

0
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

0
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

0
பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15

Recent News

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

2026-04-15
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.