கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதனால் நன்னீர் மீன்களுக்கான கிராக்கி தற்போது அதிகரித்துள்ளது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியாளர்கள் தற்போது வெள்ள நிலைமைகள் சீரடைந்த காரணத்தினால் தற்போது அவர்களுக்கான வருமானம் அதிகரித்துள்ளது காணக்கூடியதாக உள்ளது
இன்று படுவான் கரை பகுதியிலும் அதிக அளவிலான நன்னீர் மீன்பிடி ஆளர்கள் அதிகமான மீன்களை விற்பனை செய்வதனை காணக் கூடியதாக இருந்தது
இதில் கோல்டன் கொளுத்தி செத்தல் முண்டான் ஒட்டியான் சுங்கான் போன்ற மீன் இனங்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது
ஒரு கிலோ மீன் 800 ரூபாய் தொடக்கம் ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்வதை காணக் கூடியதாக இருந்தது












