இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லையெனவும் எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் கைதிகள் தொடர்பில் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ள நிலையில்
அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறைச்சாலை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.















