கனடாவின் டர்ஹம் பிராந்தியத்தில் ஒரு மாதம் நீடித்த சிறு வியாபார கடை திருட்டு ஒழிப்பு நடவடிக்கையின் முடிவில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 155 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேப் சொப் (Safe Shop) எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட நடவடிக்கை 2025 நவம்பர் 10 முதல் டிசம்பர் 16 வரை முன்னெடுக்கப்பட்டது.
அதிக அளவில் திருட்டுகள் நடைபெறும் சில்லறை கடை பகுதிகளை இலக்காகக் கொண்டு, குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் தெளிவான மற்றும் கண்காணிப்பு மிக்க பொலிஸ் முன்னிலையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதும் முக்கிய இலக்காக இருந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் LCBO கடை திருட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், இதனால் 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















