(Gloucestershire) குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள (Brimscombe) பிரிம்ஸ்கோம் ஹில் பகுதியில் (Boxing Day ) பாக்ஸிங் டே தீ விபத்தில் தாயும் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாக்சிங் டே அன்று அதிகாலையில் நேர்ந்த ஒரு கோரமான தீ விபத்தில் ஒரு தாயும் அவரது இரண்டு இளம் குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் தந்தை காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
தனது குடும்பத்தைக் காப்பாற்ற தந்தை மேற்கொண்ட தீவிர முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இந்த நிகழ்வை ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்ளூர் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளனர்.
















