புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
மீரிகம மினிஒலுவ ஸ்ரீ வித்யாவாச மகா பிரிவேனாவிற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.
செத் பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், புத்தாண்டின் செயல்பாடுகளுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு தனது ஆசீர்வாதங்களைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இலங்கை அமரபுர மகா பீடத்தின் கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்.
வெள்ளவத்தையில் உள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகத்திற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.

















