வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (0 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன
வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


















