வெனிசுலா தலைநகர் கெரகஸில் இன்று இடம்பெற்ற பாரிய தொடர் வெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவு பிபிசி (BBC) செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை 1.50 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா இராணுவ முகாம்கள் சிலவே இத்தாக்குதல்களின் இலக்காக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்த நிலையில் இன்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதும் அங்குள்ள கட்டமைப்புகளில் தீப்பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உள்ளூர்வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
update
இதவேளை, வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவம் கைது செய்தது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கமைய வெனிசுலா மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தனது ‘Truth Social’ கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்குவைத்து இன்று அதிகாலை தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதை அடுத்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

















