ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை,நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.



















