வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசுவேலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் , போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக , வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்ததையடுத்து அவரது மகன் மதுரோ குரேரா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார் .
இந்த சூழலில் , வெனிசுவேலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுரோவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி நிக்கோலஸ் மதுரோவையும் , அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் நாடுகடத்தப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.


















