ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள இறுதி திரைப்படம் ஜனநாயகன்.
இப்படம் பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 09ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இருப்பினும் நேற்று (05) வரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.
கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.
தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளது.
3 மணிநேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய ஜனநாயகன் திரைப்படத்தில் 10 இற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் உள்ளதாகவும் விஜயின் படங்களிலேயே அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக ஜனநாயகன் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
















