இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் ஏ குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் நியூ ஸ்டார் மற்றும் சோண்டர்ஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி 19 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்று முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ள நியூ ஸ்டார் கழகம் இன்றைய போட்டியில் தனது வெற்றி அலையைத் தொடரும் என நம்பப்படுகிறது.
அதேவேளை, 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுடன் 7 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்திலுள்ள சோண்டர்ஸ் கழகம் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது என்பதுடன் நியூ ஸ்டார் கழகத்தின் வெற்றி அலைக்கு முடிவு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


















