டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
2086 மத்தியநிலையங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சை டித்வா சூறாவளி காரணமாக பிற்போடப்பட்டது
இதற்கமைய 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் திருத்தப்பட்ட அட்டவணையின்படி நாளைமுதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இந்த நிலையில் பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை எந்தவொரு அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்
பேரிடர் சூழ்நிலை காரணமாக தேசிய அடையாள அட்டை அல்லது ஏனைய செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாத மாணவர்கள் அதற்கு பதிலாக இரண்டு சான்றளிக்கப்பட்ட அஞ்சல் அடையாள அட்டை அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.












