ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான தீவிர ஒடுக்குமுறையைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த அதிகளவான உயிரிழப்பு எண்ணிக்கையை, ஈரான் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.














