அமெரிக்க கடற்படையின் ‘Navy SEAL’ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இலங்கை கடற்படை வீரரான லெப்டினன்ட் கொயான் சமித்த உயிரிழந்துள்ளார்.
இவர் தனது 28 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படை வீரரான லெப்டினன்ட் கொயான் சமித்த, வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை விடுதியில் சடலமாக மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற அமெரிக்க கடற்படையின் ‘Navy SEAL’ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
அமெரிக்க கடற்படையின் விசேட பயிற்சியை முடித்த முதல் இலங்கையர் என்ற பெருமை இவரைச் சாரும்.
இலங்கை கடற்படை வீரரான லெப்டினன்ட் கொயான் சமித்தவின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















