• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள்  தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? நிலாந்தன்

KP by KP
2026/02/15
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?

ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கின்றன. அதைப்பற்றிக் கவனிக்க உங்களுக்கு நேரமில்லை?

உங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் கட்சிக்கெதிரான வழக்கு தக்கல் செய்யப்படவில்லை.நீங்கள் இருவரும் நினைத்தால் அந்த வழக்கை முடிவுறுத்தவும் முடியும்.

தலைவர் தெரிவு வரும்போது, நான் நீங்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே நினைத்தேன்.கட்சி உறுப்பினர்கள் சிலருடனும் உங்களுக்குச் சார்பாகவே கதைத்தேன்.

நீங்கள் பெறுமையாக இருந்திருந்தால் இன்று அடுத்த தலைவர் தெரிவு நடந்திருக்கும்.சில வேளை நீங்கள் முன்கதவால் தலைவராக வந்திருக்க கூடும். நாமும் மகிழ்ந்திருப்போம். ஒர் ஆளுமையான தலைவர் என்று.

தலைவர் தெரிவிற்குப் பின்னரான உங்களின் செயற்பாடு மிக அற்பத்தனமானது.உங்கள் மீதான அத்தனை கற்பிதங்களையும் போலியாக்கியுள்ளது.யோசித்துப் பாருங்கள் கட்சியின் தொண்டர்களால் தெரிவு செய்யப்படாத தலைவரும் செயலாளரும் தொண்டர்களின் மன எண்ணத்தை எவ்வாறு பிரதிபலிப்பீர்கள் ? நீங்கள் இருவரும் மக்களைப் பற்றி இன்று நினைக்கவில்லை.உங்கள் தலைமைப் பதவியையும் அதிகாரத்தைப் பற்றியுமே கனவு கான்கின்றீர்கள்.

சிறீதரன் அவர்களை நீங்கள் எப்படியாவது நீக்குவீர்கள்.அவ்வாறு நடந்ததால் அது கட்சிக்குப் பாதிப்பு. ஆனால் அது உங்ளுக்கு இரட்டிப்பு சந்தர்ப்பத்தை தரும். இலகுவாக அடுத்த தடவையாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படலாம் என்ற கணக்கு சரியாக அமையும்.

இறுதியாகக் கூறுகின்றேன்,தொண்டர்களுக்குத் தலைவரா? தலைவர்களுக்குத் தொண்டரா? என்றால் அதற்கான விடையை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”

இது முகநூலில் காணப்படும் ஒரு பதிவு.இதை எழுதியவர் வன்னிப் பெருநிலத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் ஆசிரியராக இருப்பவர். தமிழரசுக்  கட்சியை எங்கேயும் விட்டுக் கொடாதவர். எனது கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தால் அதுதொடர்பாக முகநூலில் பதில் வினையாற்றுவார். ஆனால் அவர்தான் சில நாட்களுக்கு முன் மேற்கண்டவாறு முகநூலில் எழுதியுள்ளார்.அவர் ஏன் அப்படி எழுத வேண்டி வந்தது? கட்சியின் பதில் செயலாளராக உள்ள சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒரு அறிவிப்புத்தான் காரணம்.கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக கதைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

இதை அவர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கின்றாரா? ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவுகள் எங்கே கொண்டு போய்விடும்? இக்கட்டுரையில் கூறப்பட்ட அந்த ஆசிரியர் மிகத்  துடிப்பான ஓர் அரசியல் செயற்பாட்டாளர். அவரே மனம் வெறுத்து அவ்வாறு முகநூலில் எழுதும் ஒரு நிலைமை வந்திருப்பது என்பது அவரைப் போன்ற பலர் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கக்கூடும் என்பதனை ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.அதாவது கட்சி மேலும் சிதையும் நிலைமைதான் தெரிகிறது.

நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டமும் அதைத்தான் காட்டுகிறது. தங்களுக்குள் தாங்களே மோதி கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உணர முடியாத தலைவர்களா இவர்கள்?

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு பற்றி திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பூட்டுவது. ஆனால் அப்படி எழுதுவது தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் உள்ளதில் பெரிய கட்சி.அந்தக் கட்சியும் சிதைந்தால் அதற்கு மாற்றாக மேல் எழுவதற்கு முன்னணியால் முடியுமா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் பெரு வெற்றி பெற முடியவில்லை.அவர்கள்தான் ஒப்பீட்டளவில் தெளிவாக கொள்கைகளை முன் வைக்கிறார்கள்.ஆனால் அவர்களால் கடந்த 16 ஆண்டுகளாக தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில் கிடைத்த தோல்வியும் கட்சியின் தலைவர் கஜேந்திரக்குமாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் அவர்களை புதிய பாதையில் சிந்திக்க வைத்திருக்கிறது என்று தெரிகிறது.அவர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது. ஆனால் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பது என்பது என்ன? நடந்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவது மட்டுமல்ல,அதைவிட ஆழமான பொருளில் கட்சியை கட்டமைப்புரீதியாக மீளக்  கட்டியெழுப்புவது.

அண்மையில் ஒரு கிறிஸ்தவ மதகுரு இந்தியாவில் இருந்து வந்திருந்தார். இந்தியாவில் மேற்படிப்புக்காகச் சென்றவர்.அவர் அங்கே தமிழகக் கிராமங்களில் கட்சிகளுக்கு உள்ள வட்டச் செயலர் என்ற பதவி நிலையைக்  குறித்து  உரையாடினார். வட்டச் செயலர் என்ற பதவி தமிழக மக்களைப் பொருத்தவரை தமிழ்ச் சினிமாவில் வடிவேலுவின் நகைச்சுவையோடு சேர்ந்து பிரபல்யமான ஒரு பதவி நிலை. ஆனால் அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம் அல்ல. கிராம மட்டத்தில்,அடிமட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு பதவி நிலை. அது ஒரு பொறுப்பு. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு அவ்வாறு ஆழமான அடிபட்டக் கட்டமைப்புகள் உண்டு.வட்டச் செயலர்கள் கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புகிறார்கள். கீழ் மட்டத்தில் மக்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுகிறார்கள்,வளர்க்கிறார்கள்.தமது நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் அடிமட்ட மக்களை அரசியல்மயப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்களை கட்சி மயப்படுத்துகிறார்கள்.

நமது தமிழ்த் தேசியக் கட்சிகளில் எத்தனை அப்படிப்பட்ட கிராம மட்டக் கட்டமைப்புகளை, பதவி நிலைகளைக் கொண்டிருக்கின்றன?

இதற்கு தமிழ்நாட்டு உதாரணம் கூடத் தேவையில்லை. 83 ஜூலைக்கு பின் தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தன? எப்படிப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்டன? என்பவற்றில் இருந்தாவது குறைந்தபட்சம் கற்றுக் கொண்டிருக்கலாம்.

தமிழ் இயக்கங்களுக்கு கிராம மட்டத்தில் கிராமப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குப் பொறுப்பாக ஏரியாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக அரசியல்துறைப் பொறுப்பாளர் இருந்தார். அரசியல் துறைக்கு மட்டுமல்ல படைத்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை முதலான எல்லாக் கட்டமைப்புகளுக்கும் அவ்வாறு கீழே இருந்து மேல் நோக்கிய சீரான கட்டமைப்புகள் இருந்தன.இந்தக் கட்டமைப்புகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும்.மேலிருந்து கீழ் நோக்கி வழிநடத்தப்படும்.இயக்கங்களின் கட்டமைப்புகள் பெருமளவுக்குப் படைப் பரிமாணத்தை கொண்டுவை என்பதனால் அங்கே உத்தரவுக்குக் கீழ்ப்படியும் ஒரம்சம் இருக்கும்.அதை முழுமையாக ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு பொருத்தமான நடைமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் கிராம மட்டக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியாது மட்டுமல்ல தேர்தல் அரங்குகளில் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் முடியாது.

ஜனநாயக அரசியலில் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் எது பெரும்பான்மை என்பதைத் தீர்மானிக்கும். பெரும்பான்மையின் கருத்துத்தான் அந்த மக்கள் கூட்டத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும். எனவே கட்சி மைய அரசியலுக்கூடாகச் சிந்திக்கும் பொழுது தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்.அதேசமயம் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியேயும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு.

Related

Tags: நிலாந்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!

Next Post

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
இலங்கை

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.
இலங்கை

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

2026-03-30
நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்
இலங்கை

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

2026-03-30
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
Next Post
ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

0
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.