• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Hanushya P by Hanushya P
2026/02/19
in உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில்இ முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related

Tags: carbon monoxide from the minerals.central NigeriaPlateau State
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Next Post

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

Related Posts

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

2026-08-15
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!
உலகம்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: நால்வர் பலி; 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

2026-08-14
பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!
உலகம்

பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!

2026-08-14
ஸ்டோர்பிரிட்ஜில் கட்டுக்கடங்காமல் பரவிய தீ!
இங்கிலாந்து

ஸ்டோர்பிரிட்ஜில் கட்டுக்கடங்காமல் பரவிய தீ!

2026-08-14
Next Post
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.