• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நாடாளுன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல்காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இத்தகையசூழலில் நேற்று கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதயைும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: mulaiteevuravikaran mpsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

Next Post

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

Related Posts

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?
இலங்கை

2026-02-24

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

2026-02-24
மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா  கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-02-24
இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

0
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

0
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

0
இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

0
யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

2026-02-24
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

2026-02-24
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

2026-02-24
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

2026-02-24
மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா  கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-02-24

Recent News

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

2026-02-24
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

2026-02-24
சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

2026-02-24
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

2026-02-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.