வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் அவரது பதின்ம வயது மகளும் ஒரு போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய கப்பல் ஏவுகணைகளின் சோதனைகளை பார்வையிட்டதாக தென்கொரிய அரசு ஊடகங்கள் புதன்கிழமை (11) செய்தி வெளியிட்டன.
வட கொரியா அமெரிக்கா-தென் கொரிய இராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது.
கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட படங்கள், ஒரு வருட பழமையான கடற்படை அழிப்புக் கப்பலான சோ ஹியோனில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படுவதையும் அதை மேற்படி இருவரும் வீடியோ மூலமாக பார்வையிடுவதையும் வெளிக்காட்டியது.
கிம் ஜு ஏ என்ற பெயரிடப்பட்ட சுமார் 13 வயதுடைய கிம் யொங் உன்னின் மகள் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஆயுத ஏவுதல்கள் உட்பட பல முக்கிய நிகழ்வுகளில் தனது தந்தையுடன் சென்றுள்ளதாகவும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள தீவுகளை ஏவுகணைகள் தாக்கியதாக KCNA தெரிவித்துள்ளது.
கடற்படையின் மூலோபாய தாக்குதல் நிலையை நிரூபிக்கவும், ஆயுதத் தாக்குதல்களைப் பற்றி படையினருக்கு பரிச்சயப்படுத்தவும் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கிம் யொங் உன் கூறியதாகவும் KCNA மேற்கொள்ளிட்டுள்ளது.
கடந்த வாரம் சோ ஹியோனில் இருந்து இதேபோன்ற ஏவுகணை ஏவுதல்களை கிம் யொங் உன் நேரில் பார்த்தார், ஆனால் அந்த நிகழ்வில் அவரது மகள் காணப்படவில்லை.
வட கொரியா படையெடுப்பு ஒத்திகையாகக் கருதும் வசந்த கால அமெரிக்க-தென் கொரிய இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய பின்னர் செவ்வாயன்று ஏவுகணை ஏவுதல்கள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.













