மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இணைந்து மொத்தம் 13 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. இருப்பினும், கடந்த சீசன் இந்த அணிகளுக்கு கடும் போராட்டமாகவே அமைந்தது.
கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும், அவர்களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை.
5 முறை சாம்பியன் என்ற அடிப்படையில் இம்முறை மும்பை அணி கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த சீசனில் 10-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே,இந்த முறை அணியைப் பெரிதும் மாற்றியமைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்துள்ளார். மேலும், மேட் ஹென்றி, (Matt Henry ) நூர் அகமது ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனது ஓய்வு குறித்த சஸ்பென்ஸைத் தொடர்ந்து நீட்டித்து வரும் எம்.எஸ்.தோனி இம்முறை சிறப்பான விடைபெறுதலை நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
















