2025 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகக் குறைவான வேகத்தில் வளர்ச்சி கண்டது என்பதை நாட்டின் அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்தின.
அதன்படி, 2025 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் ஒட்டுமொத்த மொத்த இங்கிலாந்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1% ஆக காணப்பட்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று (31) தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய இராச்சியத்தின் குடும்பங்கள் அதிக பணத்தைச் சேமித்ததால், சேமிப்பு விகிதம் 0.8 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 9.9% ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள், 2025 இன் நான்காவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு மாற்றமின்றி இருக்கும் எனற கணிப்புக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் போர் தேவையைப் பாதித்து, பணவீக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டில் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸும் பொருளாதாரத்தை வேகப்படுத்துவதாக வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் பின்னணியில் இந்த சவால் மேலும் பூதாகரமாக அமைந்துள்ளது.













