யாழ்ப்பாணம் – சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பாளுக்கு நேற்றையதினம் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, அம்பாள் உள்வீதியூடாக வலம்வந்து, பின்னர் வெளிவீதியுலா வர தேரேறினார்.
இதன்போது பிள்ளையார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுடன் அம்பாளும் தேரேறி முத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்த அடியவர்கள் காவடிகள், அந்த பிரதிஷ்டை, கற்பூர சட்டி போன்றவற்றின் மூலம் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்














