இங்கிலாந்தில் வழக்கமாக வாகனப் பதிவுகளுக்கு மிக முக்கிய மாதமாக விளங்கும் மார்ச் மாதத்தில் புதிய கார் பதிவுகள் சுமார் 6% அதிகரித்துள்ளதாக இன்று (07) வெளியான முதற்கட்ட தொழில்துறை தரவுகள் சுட்டிக்காட்டின.
அதன்படி, இந்த மாதத்தில் மின்கல மின்சார வாகனங்களின் (BEV) விற்பனை அளவு சாதனை அளவை எட்டியுள்ளதாக இங்கிலாந்தின் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், அவற்றின் ஒட்டுமொத்த சந்தைப் பங்கு சுமார் 23 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, 2026 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 33 சதவீதம் என்ற புதிய இலக்கை விடக் கணிசமாகக் குறைவாகும்.
இதேவேளை, பிரித்தானியாவின் மின்சார வாகனப் பயன்பாட்டு மாற்றத்தை அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை இங்கிலாந்தின் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
அத்துடன், ஈரான் நெருக்கடியானது நுகர்வோர் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை அதிகப்படுத்துகிறது என்றும் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட எரிவாயு விலையேற்றம், பிரித்தானியா உட்பட ஐரோப்பாவில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.















