அமெரிக்காவில் நடைபெற்ற சார்லஸ்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில் யூலியா ஸ்டாரோட்ப்சேவாவை (Yuliia Starodubtseva ) வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஜெசிகா பெகுலா
சார்லஸ்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் யுக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவா (Yuliia Starodubtseva ) ஆகியோர் பலப்பரீட்சை சடாத்தினார்கள்.
இதில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினார்ஜெசிகா பெகுலா இந்நிலையில் போட்டியின் முதல் செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியது. இதிலும் பெகுலாவின் கையே ஓங்கியிருந்தது. அந்த செட் ஆட்டத்தையும் 6-2 என கைப்பற்றி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜெசிகா பெகுலா.
















