ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று (20) காலை, பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று காலை சுமார் 10 மணியளவில், ராம்நகரிலிருந்து உதம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஒரு வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாகக் கவிழ்ந்து மலைச்சரிவில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில், இராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் அடங்கிய குழுக்கள் ஈடுபட்டு, ஒரு பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல பயணிகள் அருகிலுள்ள சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















