கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் 22 மாணவர்கள், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற விஷ விதையை உட்கொண்டதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் டர்னி சமன், கவலைக்கிடமான நிலையில் உள்ள 5 குழந்தைகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த விதைகளை மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்துள்ளார் எனவும்
அவற்றை உட்கொண்டதால் இந்த மாணவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த விதைகள் தற்போது உணவு ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகயீனமடைந்த மாணவர்களில் 20 சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர்.












