தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது.
2026 பெப்ரவரியில் பதிவான 1.6% உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2026 பெப்ரவரியில் பதிவான 1.1%-லிருந்து மார்ச்சில் 0.7% ஆகக் குறைந்துள்ளது.
எனினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 2026 பெப்ரவரியில் பதிவான 1.9%-லிருந்து மார்ச்சில் 3.8% ஆக அதிகரித்துள்ளது.














