நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படம் ‘ஜெயிலர்’.
இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, யோகிபாபு உள்பட பலர் நடித்திருந்தனர்.
சிவ ராஜ் குமார், மோகன்லால் கவுரவ வேடத்தில் நடித்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 600 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
படக்குழுவினர் ரஜினிகாந்துடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது
















