பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் சுமைகள் மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் ஆகியவை மக்கள் சுரண்டப்படுவதற்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நவீன தொழில்நுட்பமானது குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக மக்களைச் சேர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் எளிதாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர அடிமைத்தன ஒழிப்பு ஆணையர் எலியோன் லயன்ஸின் கூற்றுப்படி, 2025ம் ஆண்டில் 23,000க்கும் மேற்பட்ட சாத்தியமான பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 22 வீதம் அதிகரிப்பு மற்றும் இதுவரையிலான மிக உயர்ந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பிரித்தானிய குடிமக்கள் ஆவர்.
அதேவேளையில், எரித்திரியா மற்றும் வியட்நாம் ஆகியவை பாதிக்கப்பட்ட மற்றைய முக்கிய நாடுகளாகும்.
குற்றக் கும்பல்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஆட்கடத்தல், கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றைக் கண்காணிப்பது மேலும் கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தளங்கள், குற்றவாளிகள் குழந்தைகளையும் பாதிக்கப்படக்கூடிய நபர்களையும் குறிவைக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சிறுவர்கள் போதைப்பொருள் வலையமைப்புகளிலும், சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.















