மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார்..
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளையும் பரஸ்பர நட்புறவினையும் ம் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் ; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி,இன்று காலை இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்
இதேவேளை இந்திய விமானப்படை தளபதிக்கு இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.













