பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை முடிவடைந்ததாக கூறி, அதற்குப் பதிலாக தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் முறையை ஆராய்ந்து, அதில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக ஒரு புதிய ‘தேசிய ஆணையத்தை’ (National Commission) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமீபத்திய ஆண்டுகளில் பிரித்தானிய அரசியல் பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.
கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு சவாலாகப் பல சிறிய கட்சிகள் உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் இந்த புதிய அரசியல் சூழல், தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விகிதாச்சார தேர்தல் முறைக்கு ஆதரவாக ரிஃபார்ம் யுகே (Reform UK), லிபரல் டெமாக்ரட்ஸ் (Lib Dems), கிரீன் பார்ட்டி (Green Party), எஸ்.என்.பி (SNP), பிளாய்ட் சிம்ரு (Plaid Cymru) ஆகிய காட்சிகள் வாதிட்டு வருகின்றனர்.















