ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு சார்பாக, 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையான இருவர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நான்கு பேரையயும் கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் லஹிரு சில்வா பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது, வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.டபிள்யூ.டி. அனுருத்த, நீதிமன்றில் மேலதிக அறிக்கையை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்து மேற்படி சந்தேகநபர்கள் பிணையாளராக முன்னிலையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் மரணத்துக்கும் இந்த போலிப் பிணையாளர்களின் முறைகேடான செயற்பாடுகள் ஏதேனும் ஒரு வகையில் அடித்தளமாக அமைந்ததா என்பது தொடர்பாக பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சந்தேகநபர்களுக்குப் பிணை நிற்பவர்களின் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் மற்றும் சொத்து விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் அதிகாரிகளை பணித்திருந்தார்.
மேலும் சந்தேகநபர்களு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நீதிவான் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.













