வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ (Tribeca) மறுஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வணிக வளாகங்களுக்குப் பதிலாகப் பெருமளவிலான வீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க அதன் உரிமையாளர்கள் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.
இந்த மாபெரும் நிலத்தின் உரிமையாளர்களான ‘கேசல்பிரூக் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ (Castlebrooke Investments) நிறுவனம், இத்திட்டத்திற்காக முன்பு பயன்படுத்திய ‘டிரைபெகா’ என்ற பெயரையும் தற்போது அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.
இந்த மாபெரும் நிலத்தை கேசல்பிரூக் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தன்வசம் வைத்துள்ளது.
எனினும், கடந்த 20 வருடங்களாக இந்த நிலத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் அது பாழடைந்த நிலமாகவே காணப்பட்டது.
இதனால், இந்த நிலத்தை அரசாங்கமே பொது உடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன.
இந்நிலையிலேயே, இப்பகுதியில் 1,000 புதிய வீடுகள் மற்றும் இரண்டு ஹோட்டல்களைக் கட்டுவதற்கான புதிய ஆரம்பக்கட்ட திட்டமிடல் அறிவிப்பை கேசல்பிரூக் நிறுவனம் தற்போது சமர்ப்பித்துள்ளது.














