மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட எல்தெனிய, கோனஹேன, வேபெட, சூரியபாலுவ, உடுபிட மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பரகந்தெனிய, கொஸ்ஸின்ன, எபரலுவ, இம்புல்கொட , பகுதிகளில் நாளை (11) பி.ப. 7.00 மணி முதல் மறுநாள் (12) மு.ப. 7.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.













