பிரான்ஸின் ஏவியான் (Evian) நகரில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா உடனான வர்த்தகப் பிரச்சினைகள், ‘Operation Sindoor ‘ இராணுவ நடவடிக்கை குறித்து ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் ஓமன் கடற்பரப்பில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் எனப் பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளன.
முன்னதாக, சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கய் பார்மேலினையும் (Guy Parmelin) நேரில் சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி, G7 மாநாட்டின் உயர்மட்ட அமர்வுகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















