செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவினர், செம்மணி பகுதிக்கு நாளையதினம் நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்வதற்கான நீதிமன்ற அனுமதி கோரி கடந்த 16ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்றையதினம் வழக்கு அழைக்கப்பட்ட நிலையில், நீதி அமைச்சின் விசேட குழுவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














