மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலமான காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. ஆக இருக்கும். ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் மிதமான நிலையில் இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.













