அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.
அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ கினியா, அந்நாட்டிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி அனைத்தையும் நிறுத்திவைத்தது.
முதல் இரண்டு உறுதிசெய்யப்பட்ட பாதிப்புகள் பதிவான மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பெரான்ஸிலிருந்து 1,200 கி.மீ (746 மைல்கள்) கிழக்கே உள்ள ஃபௌலர்ஸ் பே அருகே, திங்களன்று இரண்டு இறந்த துணை அண்டார்டிக் கடற்பறவைகளும் ஒரு கூழைக்கடாவும் (pelican ) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு அவுஸ்திரேலியாவில் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.














