தெற்கு வேல்ஸ் பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 14 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே வயதுடைய சிறுவன் ஒருவனைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பிளைனாவில் உள்ள டஃப்ரின் பார்க் (Duffryn Park, Blaina) பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:10 மணியளவில் அரங்கேறியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ‘லில்லி’ (Lilly) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
14 வயதான சிறுமி லில்லி, கடந்த ஜூன் 20 ஆம் திகதி மாலை 18:50 மணியளவில் பிளைனா உயர் வீதியில் (High Street) கடைசியாகக் காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் அவர் காணாமல் போயிருந்தார்.
சிறுமி லில்லியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிளைனா குவென்ட் (Blaenau Gwent) பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் குவென்ட் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.














