மேற்காசியப் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய மக்கள் காட்டி வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒலிபரப்பான தனது 135-வது ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தனி வாகனப் பயன்பாட்டைக் குறைத்து கூட்டுப் பயணங்களை மேற்கொள்வதையும், தங்கம் வாங்குவதைத் தவிர்த்து பழைய நகைகளை மறுவடிவமைப்பு செய்வதையும் வரவேற்றார்.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட C 295 விமானத்தின் வெற்றிகரமான பயணத்தைக் குறிப்பிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு உள்நாட்டு மண்பாண்டக் கலைஞர்கள் தயாரித்த சிலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



















