• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/06
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது.

நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் இந்த மோதல் வெடித்தது.

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘பூரு மூனா’ என்பவனுடன் நெருங்கிய தொடர்புள்ள, சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரனே இந்த வன்முறைக்குத் தலைமை தாங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குள் நடந்த காட்டிக்கொடுப்பு தொடர்பான ஒரு சம்பவமே இந்த இருதரப்புப் பகைக்குக் காரணமாகும்.

நேற்று நடந்த ஆரம்பக்கட்ட மோதல்களில் 2 கைதிகள் உயிரிழந்ததோடு, 38 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இன்று காலை கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது, மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது.

ஆக்ரோஷமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கினர்.

அதிகாரிகள் பிரதான வாயிலை நோக்கி ஓடியபோது, கைதிகள் அவர்களைத் துரத்திச் சென்று, சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயன்றனர்.

இதன்போது அதிகாரிகள் தற்காப்புக்காகக் குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்துக் கைதிகளைக் கட்டுப்படுத்தினர்.

கைதிகள் சிறையிலுள்ள விசேட அறைகளின் சுவர்களை உடைத்து, அங்கிருந்த விசேட கைதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதேநேரம், மற்றொரு குழுவினர் போதையேறும் நோக்கில் சிறை மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டனர்.

இன்று காலை மீண்டும் வெடித்த கொடூர மோதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த 13 கைதிகள் அவசரமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைதிகள் கட்டுப்பாட்டை மீறி வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களின் அதிகாரிகள் முழுமையாகக் களமிறக்கப்பட்டனர்.

சிறைக்குள் நிலவும் அசாதாரண சூழலைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை களமிறங்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு 02 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஒரு பெல் 412 (Bell 412) ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு ஆதரவாக, சிறையிலிருந்த பெண் கைதிகளும் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆக்ரோஷப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், சிறைக்கு வெளியே திரண்டிருந்த கைதிகளின் உறவினர்கள், தங்களுக்கு உரியத் தகவல்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.

பின்னர் பொலிஸார் தலையிட்டு, மருத்துவமனையில் உள்ள கைதிகளைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கினர்.

தற்போதைய பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலுள்ள ஒரு தொகுதி கைதிகளை உடனடியாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறை வரலாற்றில் இதற்கு முன்னர் 2012 நவம்பர் 9 அன்று வெலிக்கடை சிறையில் கைபேசிகள் மற்றும் போதைப்பொருட்களைத் தேடச் சென்ற பாதுகாப்புப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

உலகளவில் பேசப்பட்ட அந்தச் சர்ச்சைக்குரிய கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக, 2022 ஜனவரியில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையர் எமில் ரஞ்சன் லமஹேவாவுக்குக் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நீர்கொழும்பு சம்பவமும் அதே போன்றதொரு அதிர்வலையே தற்போதும் ஏற்பட்டுள்ளது.

Related

Tags: conflict in Negombo prisonNegombo Prison.srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

Next Post

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

Related Posts

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்
இலங்கை

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2026-07-07
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

2026-07-07
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

2026-07-07
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!
இலங்கை

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

2026-07-07
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
Next Post
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

சிறை மோதல் - விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர்  உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

0
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

0
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

0
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

0
ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.