சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப் பெற்று,தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையான செயற்பாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகயீன விடுமுறைப் போராட்டத்துடன் இணைந்து, பத்தரமுல்லையில் உள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகப் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் உள்வாங்க முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டிரனை முன்வைத்துள்ளனர்.
தவறான முறையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள் மாத்திரமன்றி, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள், பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் தொழிற்சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .














