தொம்பே பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய சோதனையின்போது, 8 கிலோ ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், சந்தேக நபரிடமிருந்து 20 தோட்டாக்கள், 3 கண்ணிவெடிகள் மற்றும் ஐந்து வாள்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகள் எதற்காகப் பயன்படுத்தப்படவிருந்தன மற்றும் இதன் பின்னணியில் உள்ள ஏனைய குற்றக் கும்பல்கள் எவை என்பது குறித்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.












