நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளை நினைவுகூரும் வகையில் , வணக்கத்திற்குரிய மீகோட சுகித தேரர் அவர்களால் இன்று காலை (13) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தில் நினைவுப் பிரசங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஆயிஷா ஜினசேன, சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நினைவாக நினைவுப் பிரசங்கம் நடைபெற்றதுடன், இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டன.












