பிரிட்டனின் மிகப்பெரிய நீர் நிறுவனமான தேம்ஸ் வாட்டரை, பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கம் தேசியமயமாக்க முயற்சித்தமையினால் , அதற்கு கடன் வழங்கியவர்கள் சட்டரீதியான சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
இன்று பிரதமராகப் பொறுப்பேற்கும் பர்ன்ஹாம், நீர் மற்றும் எரிசக்தித் துறைகளில் “அதிகரித்த பொதுக் கட்டுப்பாட்டைக்” காண விரும்புவதாகவும், தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்றும் முன்னதாகக் கூறியிருந்தார்.
தேம்ஸ் வாட்டர் நிறுவனம் சுமார் £20 பில்லியன் கடனில் உள்ளது.
எதிர்கால மாசு அபராதங்களில் சில சலுகைகளுக்கு ஈடாக, அந்தக் கடனில் கிட்டத்தட்ட பாதியைத் தள்ளுபடி செய்து, புதிய பணத்தை முதலீடு செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை அதன் கடன் வழங்குநர்கள் முன்மொழிந்திருந்தனர்.
ஆனால், இந்த ஒப்பந்தம் “பலவீனமானது” என்றும், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதாகவும் கூறி அரசாங்கத்தால் முன்னதாக நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













