பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்து நடப்பார் என்றும், அதேநேரம் நாட்டின் வளர்ச்சிக்காக இன்னும் துணிச்சலான மற்றும் லட்சியப் பூர்வமான முடிவுகளை எடுப்பார் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் லுசி பவல் (Lucy Powell) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பர்ன்ஹாம் பொருத்தமானவர் அல்ல என எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் (Conservative) தலைவி கெமி பேடெனோக் (Kemi Badenoch) கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமரின் பணி என்பது ஒரு புகழுக்கான போட்டி அல்ல. அது சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும் எனவும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி இதுவரை எந்தவொரு தெளிவான திட்டமும் கூறவில்லை, எல்லாமே வெறும் வெற்றுப் பேச்சுகளாகவே உள்ளன. எனவும்
கெமி பேடெனோக் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.












